Tuesday, February 22, 2011

நாகையில் முழங்கிய விஜய்


இலங்கை இராணுவத்தினர் மனிதர்களா அல்லது அரக்கர்களா? நாங்கள் புலிப்பால் குடித்து வளர்ந்த பரம்பரை! நாகையில் முழங்கிய விஜய் 

இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நாகை காடம்பாடி சாலையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. 

கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் 4 மணிக்கு மேடைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் 4 மணிக்கு திடீரென நாகையில் மழை பெய்ய ஆரம்பித்தது. ஆனால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காடம்பாடி மைதானத்தில் ரசிகர்களும், பொதுமக்களும் கூடியிருந்தனர். 

மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் மாலை 5.30 மணி வரையும் நடிகர் விஜயால் மேடைக்கு வர முடியவில்லை. 5.35 மணியளவில் மழைலேசாக தூறியதை தொடர்ந்து 5.45 மணிக்கு நடிகர் விஜய் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். 

அப்போது திரண்டிருந்த ரசிகர்கள் கைகளை தூக்கி ஆரவாரம் செய்தனர். நடிகர் விஜய் ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கையை அசைத்தும், பிளேன் கிஸ் கொடுத்தும் அவர்களை உற்சாகப்படுத்தினார். 

அப்போது மேடை முன் திரண்டிருந்த ரசிகர்கள் மேடையை நோக்கி முண்டியடித்துக்கொண்டு வந்ததால் கூட்டத்தில் கடும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதன்காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதற்கிடையே நடிகர் விஜய் பொதுக்கூட்ட மேடையில் பேசிய போது, 

ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பியை இழந்தால் எவ்வாறு துன்பப்படுவோமோ அதுபோல இன்று நாம் ஒன்று அல்ல, 2 அண்ணன்களை இழந்து துயரப்பட்டு உள்ளோம் என பேசிக்கொண்டு இருந்த போது மழை தூறியதாலும், ரசிகர்கள் விஜயை பார்ப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு ஆர்ப்பரித்து வந்ததாலும் விஜயால் பேச முடியவில்லை. 

இதைத்தொடர்ந்து விஜய் பேச்சை நிறுத்தி விட்டு ஓட்டலுக்கு திரும்பினார். பின்னர் சுமார் அரைமணி நேரம் கழித்து மீண்டும் விஜய் மேடைக்கு வந்தார். 

அப்போது அவர் பேசியதாவது:- 


தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இங்கு நாம் இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். இது சென்னை கோட்டையை மட்டுமல்ல, டெல்லி கோட்டை வரை எட்டும். 

இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில வருடங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். 

500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர். நாகை மீனவர் ஜெயக்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரை கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து கடலில் தூக்கி வீசி உள்ளனர். 

இலங்கை ராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? இவ்வளவு நடந்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. இலங்கை ராணுவத்திடம் நாம் அடிபணிந்து கிடக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட. 

மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும். ஏதோ வந்தோம், நாம் கூட்டம் நடத்தினோம் என்று இருக்கக்கூடாது. சேவை செய்ய வேண்டும். 

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களின் நிலை குறித்தும் நீங்கள் பிரதமர் மற்றும் முதல்- அமைச்சருக்கு தந்தி அனுப்ப வேண்டும். நாளை காலை நீங்கள் தந்தி அனுப்ப வேண்டும். 

இனி தமிழர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன் இவ்வாறு அவர் பேசினார். 

பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் மேதகு பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மறைவுக்கும், மீனவர்கள் ஜெயக்குமார், பாண்டி ஆகியோரின் மறைவுக்கும் 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். 

இறந்த மீனவர்கள் ஜெயக்குமார், பாண்டி குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரத்தை மேடையில் நடிகர் விஜய் வழங்கினார். மேலும் 10 மீனவர்களுக்கு மீன்பிடி வலை, மரக்கன்றுகள், படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஆகியவற்றையும் நடிகர் விஜய் வழங்கினார். 

கூட்டத்திற்கு நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். புதுவை மாநில விஜய் நற்பணி மன்ற தலைவரும், எம்.எல்.ஏ.வுமான புஸ்ஸி.ஆனந்த், அகில இந்திய விஜய் தலைமை நற்பணி மன்றத்தை சேர்ந்த ஜெயசீலன், ரவிராஜா, ராஜேந்திரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Sunday, February 20, 2011

'நிஜவேர்'களைத் தேடும் 'சாஃப்ட்வேர்'...



"இன்னிக்கு எல்லாருக்கும் நல்ல கல்வி கிடைக்குது. திறமை இருக்கறவங்களுக்கு கை நிறைய சம்பளத்துல வேலை கிடைக்குது. கணினிக்கு வாக்கப்படறதுக்கு பலனா... வீடு, கார்னு விரும்பின வாழ்க்கை கிடைக்குது. நல்ல விஷயம்தான். ஆனா, இப்படி எல்லோருமே 'வொயிட் காலர் ஜாப்'ங்கறத நோக்கியே போயிட்டா, உயிராதாரமா இருக்கற உணவுப் பொருள்கள யார்தான் உற்பத்தி செய்றது..?"

- முக்கியமான கேள்வியுடன் ஆரம்பிக்கும் பிரதீபா நக்வார், இன்று ஒரு இயற்கை விவசாயி; ஆறு ஆண்டுகளுக்கு முன்... சாஃப்ட்வேர் இன்ஜினீயர்!




கர்நாடகா மாநிலம், நக்வார் என்ற கிராமத்தைச் சேர்ந்த சௌபாக்கியதேவி- ரங்கய்யா தம்பதியின் மகள் பிரதீபா. பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு, அமெரிக்காவில் பெரிய நிறுவனம் ஒன்றில் ஒன்பது ஆண்டுகள் பணி... அதே நிறுவனத்துக்காக லண்டனில் இரண்டு ஆண்டுகள் பணி என பதினோரு ஆண்டுகள் கை நிறைந்த சம்பளத்துடன் உயர்ந்த பொறுப்பை நோக்கி விரைந்து கொண்டிருந்தவர்.

எங்கு, எப்படி நிகழ்ந்தது இந்த கணினி டு கழனி மாற்றம்?

"சாஃப்ட்வேர் துறையில வேலை பார்த்தப்போ, நான் சந்திச்ச பலர், விவசாயக் குடும்பங்கள்ல பிறந்து, படிச்சு, பெரிய பணிகளுக்கு வந்தவங்களா இருந்தாங்க. 'ஊர்ல எப்படி இருக்கு உங்க விவசாயம்?'னு அவங்ககிட்ட ஆர்வமா கேட்பேன்.

'இனியும் அது எதுக்கு எங்களுக்கு? அப்பா, அம்மாவை சிட்டிக்கு கூட்டிட்டு வந்துட்டேன். தாத்தா, பாட்டி இருக்கறவரைக்கும் அவங்களால முடிஞ்சத பார்ப்பாங்க. அப்பறம், அவ்வளவுதான்! கிட்டத்தட்ட, எங்க ஊருல இருக்கற எல்லா விவசாய நெலத்தோட நிலைமையும் இதுதான்!'னு காலம் காலமா அவங்கள காப்பாத்தின, உலகத்து பசியையெல்லாம் ஆத்திட்டு வந்த, பாரம்பரிய தொழிலோட ஆயுள் முடியப்போறதைப் பத்தின எந்த வருத்தமும் இல்லாம சொல்லுவாங்க. ஆனா, அதை என்னால சுலபமா கடந்து போக முடியல.

'இந்தத் தலைமுறையும், இனி வரும் தலைமுறையும் இப்படி விவசாயத்தில் இருந்து விலகிட்டா, அப்பறம் உணவுங்கறது எங்கிருந்து கிடைக்கும்?'னு எனக்குள்ள எழுந்த கேள்வி, என்னை பல இரவுகள் தூங்க விடல. அதுக்காக இயக்கத்துல சேரவோ, கட்டுரைகள் எழுதவோ, பிரசாரத்துல கலந்துக்கவோ எனக்கு விருப்பமில்ல.

'நாம விரும்பற மாற்றத்துக்கான முதல் புள்ளியா, நாமளே இருப்போம்!'னு இறுதியா, உறுதியா முடிவெடுத்து, வேலையை விட்டுட்டு விவசாயத்துல இறங்கினேன். என்னை நோக்கி வந்த அதிர்ச்சிப் பார்வைகள், கேலிப்பேச்சுகள், அறிவுரைகள் எல்லாம் ஒரு கட்டத்துல அதுவா விலகிடுச்சு. இப்போ இந்த பிரதீபா 11 ஏக்கர் நிலத்துல... நெல், காய், கனி, பயறுனு விளைவிக்கற ஒரு விவசாயி!" என்று சொல்லும் பிரதீபாவின் தீர்க்கமான பார்வையும், அதை அவர் அடைந்த தெளிவும், அவர் மீது மரியாதையைக் கூட்டுகின்றன.




பெங்களூருவில் இருந்து கனக்புரா செல்லும் வழியில், முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்தால்... கபாடி எனும் கிராமம். அங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில்... ஆள் அரவம் இல்லாத சூழலில்... சுற்றிலும் சூரிய மின்வேலியுடன் கிடக்கிறது பிரதீபாவின் பண்ணை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் கரடு முரடாக இருந்த இந்த நிலத்தை தன் கடும் உழைப்பால் சொர்க்கபூமியாக மாற்றிக் கொண்டிருக்கிறார். ரசாயனங்களை தன் நிலத்துப் பக்கம் அனுமதிப்பதே கிடையாது பிரதீபா. தன் பண்ணையில் 13 மாடுகளையும் வளர்த்து பராமரித்து வருகிறார். "ராத்திரியாயிட்டா... அந்த 13 மாடுகளும், நாலு குழந்தைங்களும்தான் (நாய்களை இப்படித்தான் சொல்கிறார்) எனக்குத் துணை" என்று சொல்லும் பிரதிபா, தனியருவராகத்தான் வாழ்ந்து வருகிறார்!

"ஆரம்பத்துல, 'கீ போர்டு தட்டற வேலையில்லம்மா இது'னு சிரிச்சவங்க பலர். ஆனா, ஏர் கலப்பை, டிராக்டர், களையெடுக்கற கருவி, விதை விதைக்கற கருவி, மாட்டு வண்டினு எல்லாமே இப்போ என் கைக்கு பழகிடுச்சு. ஹைபிரீடு ரகங்களைத் தவிர்த்துட்டு, பாரம்பரிய நெல் ரகங்களை மட்டுமே விவசாயம் பண்றேன். மா, பப்பாளி, வாழை, பாக்கு, தேக்கு, சவுக்கு, மாதுளை, நெல்லி, கொய்யா, முருங்கைனு பலவகைப் பயிர்களும் என் தோட்டத்துல விளையுது" என்று சந்தோஷமாகச் சொல்லும் பிரதீபாவின் ஈடுபாடு, நமக்கு ஆச்சர்யம் தருகிறது.

"வேலைக்குப் போறவங்களோட மாசச் சம்பளம் போல ஒரே மாதிரியான நிரந்தர வருமானம் இருக்காது விவசாயத்துல. ஆனா, அந்த சூழலை பழகிகிட்ட எளிமைவாதிகள் விவசாயிகள். அந்த மனநிலையை நாமளும் ஏற்படுத்திக்கிட்டா, படிச்சவங்களும் மனநிறைவோடு விவசாயம் செய்யலாம்!" என்பவர்,

"என்னைப் பத்தி பத்திரிக்கையில செய்தி வந்தா... சில நாட்களுக்கு போன்ல விசாரிப்பாங்ல, பாராட்டுவாங்க. அதைத்தாண்டி பட்டதாரிகள் மத்தியில 'விவசாயத்தை நோக்கி' ஏதாவது மாற்றம் நிகழ்ந்தா, அதுதான் என் சந்தோஷம்!"

- நல்ல செய்திக்காக காத்திருக்கிறார் பிரதீபா!

நன்றி: (அவள் விகடன் 05-11-2010 )

Saturday, February 19, 2011

வணிகம் குறித்த தகவல் தெரிந்து கொள்ள சில வலை தளங்கள்.

கீழ்  கண்ட தகவல்கள் உங்களுக்கு வணிகம் குறித்த செய்திகளை தரும் என்பது என் நம்பிக்கை. இவற்றால் சிறிது உங்களுக்கு நன்மை ஏற்பட்டாலும் அது எனக்கு மிக்க மகிழ்ச்சி.  

  பங்கு சந்தை குறித்த தகவல் தெரிந்து கொள்ள சில வலை தளங்கள்.




4) http://stock.tamilsasi.com 

5) http://porulsey.blogspot.com

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL)


கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.
பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்வியுற்ற காமராஜ் அவர்களையும் உடன் சென்றாய்ந்த நம்மவர்களையும் அழைத்தார். அமைதியாக விசாரித்தார். அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் உடன் விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர். 
ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜ் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் “காவிரியாற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?”, அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.
“ஏன்?… இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க” என்றார்.
என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தொன்றியது.

அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் “பெல்” என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமே அது.
காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல் வார்த்தைகளை வீசியதுண்டு.
அப்போது காமராஜ் மிக அடக்கமாக கூறினார், “பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை”.

காமராஜர் வரலாறு


காமராஜ் தமிழ்நாட்டின் முன்னால் முதலமைச்சர் ஆவர். 1954 ஆம் ஆண்டு  அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். .
இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பணியாற்றினார்.

இவர் தமிழகத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு முறையை அமல் படுத்தினர். காமராஜர் எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்தபிறகு "பாரத ரத்னா" விருது அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப வாழ்க்கை.
காமராஜர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் பிறந்தார். பெற்றோர் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள். அவர்களின் குல தெய்வமன் காமாட்சி இன் பெயர் வைத்தார்கள். தயார் சிவகாமி அம்மாள் மட்டும் "ராஜா" என்றே அழைத்தார்கள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் காமராஜ்  என்ற பெயரே நின்றது. தனது பள்ளி படிப்பை க்ஷக்த்ரிய வித்யா சால பள்ளியில் துவங்கினார்.  படிக்கும்பொழுதே மிகவும் பொறுமையுடனும், விட்டு கொடுக்கும்   மனதுடனும் விளங்கினார். மிகவும் சிறிய வயதிலேய அவருடைய தந்தையை இழக்கும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆறு வயதாக இருக்கும்போதே அவருடைய தந்தை இறந்தார். ஆறாம் வகுப்பு வரை படித்தார். இவருக்கு இரண்டு  சகோதரர்கள் உண்டு. அவரின் பெயர் கருப்பையா  நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் காசிநாராயண  நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.  




சிறை வாழ்க்கையும் படிப்பும்

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராஜர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது வரதராஜுலு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆரவம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரஸின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.

ராஜாஜியின் தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராஜ் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார். 1940-ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவியை ராஜினாமா செய்தார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாக அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இந்த மாதிரியான சிறை வாழ்க்கைகளின் போது தான் காமராஜ் சுயமாகப் படித்துத் தன் கல்விஅறிவை வளர்த்துக் கொண்டார்.

அரசியல் குரு

மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராஜர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராஜரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராஜர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில்சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத் தான் தன் பணியைத் தொடங்கினார்.

தமிழக அரசியல்

தமிழக ஆட்சிப் பொறுப்பு

1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராஜாஜிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராஜர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராஜ்ஜியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)

குலக்கல்வித் திட்டத்தால் ராஜாஜியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரஸின் உள்ளேயே ராஜாஜிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராஜாஜி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம்; நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார். ஆனால் கட்சிசட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான், காமராஜர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று முதல்வரானதன் பின்னணி.

வித்தியாசமான அமைச்சரவை
காமராஜர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:

மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்)அமைச்சர்கள் இருந்தனர்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.

அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்க வேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு திமுக ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. திமுகவின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; திமுக வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று எம் எல் ஏ ஆனவர்கள் இந்த இருவரும்.)

அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி.பரமேஸ்வரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை. (தாழ்த்தப்பட்டோர் கோவில்களில் நுழையவே எதிர்ப்பும் அனுமதி இன்மையும் இருந்த நாட்களில், தாழ்த்தப்பட்ட ஒருவர் அமைச்சர் என்கிற போர்வையில் போகும் போது பூரண கும்ப மரியாதை தரப்படுவதற்கு, ஆர்ப்பாட்டமில்லாமல் காமராஜர் செய்த ஒரு புரட்சி இது).

முதலமைச்சராக ஆற்றிய பணிகள்


ராஜாஜி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் காட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராஜரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.

காமராஜ் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.

அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:

பாரத கனரக மின் நிறுவனம் (BHEL)


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC)

மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)

இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)

நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை

கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை

மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராஜரால் ஏற்படுத்தப்பட்டவை.

அகிலஇந்திய காங்கிரஸ் தலைமை


மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராஜர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராஜர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராஜர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், எஸ்.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.

அகில இந்திய அளவில் காமராஜாரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் ஜவஹர்லால் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி அவர்களை முன்மொழிந்து காமராஜர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராஜருக்குக் கணிசமான பங்கு இருந்தது.

இறுதிக் காலம்
காமராஜருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராஜரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரஸ் தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராஜர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திராகாந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராஜரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.

திரைப்படங்கள்
2004-ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

காமராஜ் பற்றிய ஏனையவரது கருத்துக்கள்


"திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராஜர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன். நேரு

“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராஜர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராஜரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?"- தந்தை பெரியார்.

“காமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.”-இந்திரா காந்தி

"சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராஜை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்."- சுப்பிரமணிய அய்யர்

"காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"- எம். ஜி. இராமச்சந்திரன்

"தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."-கலைஞர் கருணாநிதி

"காமராஜர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், ஸ்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது."-மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமஸ்

“தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராஜ், காமராஜ் மகாபுருஷர்.”-காஞ்சி சங்கராச்சாரியார்


























Thanks to http://ta.wikipedia.orghttp://kamarajar.blogspot.com.

காமராஜர் செய்த தவறு என்ன தெரியுமா?


சத்தியமூர்த்தி என்பவர் காமராஜருக்கு அரசியல் குருவாக இருந்தவராம்.
சத்தியமூர்த்தியின் மனைவியிடம், "எனக்கு காமராஜர் ஒரே பையன். அவன் திருமணம்
செய்யாமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவனை திருமணக் கோலத்தில்
பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. அவனிடம் இதை எடுத்து சொல்லி
திருமணத்துக்கு சம்மதிக்க செய்யுங்கள்'' என்று காமராஜரின் தாயார் கூறினாராம்.
குருநாதரின் மனைவியும் காமராஜரிடம் இந்த செய்தியை சொல்லியிருக்கிறார். காமராஜர்
எந்த பதிலும் சொல்லாமல் சென்றிருக்கிறார்.
அன்று மட்டும் காமராஜர் "சரி" என்று சொல்லி ஒரே ஒரு கல்யாணம் செய்திருந்தால்
இந்த நாடு இப்படி சீர்கெட்டுப் போயிருக்குமா?.
"கிங் மேக்கரா"யிருந்தவருக்கு "பிரின்ஸ்மேக்கரா"ய் இருப்பது கஷ்டமான காரியமா?
ஒரு பிள்ளை விஜயநகர அரசை உருவாக்க... சோழப்பேரரசை மற்றுமொரு பிள்ளை
கவனித்துக்கொள்ள... சேரப்பேரரசில் அண்ணனோ தம்பியோ கோலோச்ச... எவ்வளவு ஆனந்தமாக
தமிழ்நாடு இருந்திருக்கும்!
தென்னிந்தியா முழுவதும் தமிழன்னையின் குரல் எதிரொலித்திருக்காதா? இந்தி அரக்கி
எட்டிப்பார்த்திருப்பாளா இங்கே?
அண்ணன் தம்பிகள் அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்களாக இருந்திருந்தால்
முல்லைப்பெரியாறும், காவிரியும், கிருஷ்ணாவும் இப்படி தண்ணீர்ச்சுழலில்
சிக்கித் தத்தளிக்குமா?
ஒற்றைக் கையெழுத்தில் தீர்ந்துபோயிருக்காதா தொல்லைகள்?
தவறு செய்துவிட்டார் காமராஜர்.
படிக்காத தற்குறியாக இருந்திருக்கிறார் காமராஜர்.
டெல்லியில் "ஆர் யூ ரெடி?" என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு காமராஜர்," நான்
ரெட்டி இல்லை. நாடார்" என்றிருக்கிறார்.
ஒரு பேரனோ பேத்தியோ இருந்திருந்தால் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டிருக்குமா?
பேரனை ரேடியோ மந்திரியாக்கியிருக்கலாம். டெல்லி ஆங்கில வெறியர்களிடமிருந்து
காமராஜர் தாத்தாவை பேரன் கேடயமாக இருந்து காப்பாற்றியிருக்க மாட்டாரா?
அன்னையின் பேச்சைக்கேட்டு ஒரு திருமணமாவது அவர் செய்துகொண்டிருக்கவேண்டும்.
தவறு செய்துவிட்டார் காமராஜர்.
பிள்ளைகள் இருந்து காங்கிரஸ் கட்சியை பரிபாலனம் செய்து வந்திருந்தால் இப்படி
கதம்பக் கட்சியாகப்போயிருக்குமா காங்கிரஸ்?
கண்ணதாசன் என்று ஒரு கவிஞர். காமராஜருக்கு கொடுத்த சர்ட்டிபிகேட்டைப்பாருங்கள்.
எதிலுமே திறமையில்லாதவராக இருந்திருக்கிறார் பாருங்கள்...

சொத்து சுகம் நாடார்
சுகம்தன்னை நாடார்
பொன்னென்றும் நாடார்
பொருள் நாடார்
தன்னைப்பெற்ற அன்னையையும் நாடார்
ஆசைதனை நாடார்
நாடு ஒன்றே நாடி தன்னலம் ஒன்றும்
நாடாத நாடார்.


 இப்படியெல்லாம்கூட தலைவர்கள் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.
எல்லாம் தமிழ்நாட்டின் தலையெழுத்து!
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சியமாதிரி பத்திரிக்கைகளில் அண்மையில் ஒரு செய்தி.
"காமராஜர் பேத்திக்கு மருத்துவ செலவிற்காக தமிழக அரசு உதவிசெய்திருக்கிறது."
தமிழகத்தில் முதல்வராக இருந்தவர்களிலேயே மருத்துவ உதவிக்கு அரசாங்க
உதவியைப்பெற்றவர் காமராஜரின் பேத்தியாகத்தான் இருக்கும்.
தமிழகத்திற்கு எவ்வளவு பெரிய தலைகுனிவு!
இந்த பத்திரிக்கைகளுக்காகட்டும்! ...கொஞ்சம்கூட சாமர்த்தியம் போதாது.
இந்தச்செய்தியை கட்டம் கட்டியா போடுவது?
போகட்டும்...இந்தப்பத்திரிக்கைகள் எல்லாம் அற்பமானவை. கொசுவிற்குச் சமமானவை அவை
!
கொசுக்களுக்கு என்ன தெரியும்? மாட்டின் பால் மடியில் போய் உட்கார்ந்து
பாலைக்குடிக்கத்தெரியுமா
அவைகளுக்கு?
இரத்தத்தையல்லவா குடிக்கும் அந்த ஏமாளிக்கொசுக்கள்!
--மு.குருமூர்த்தி


Thank to http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/d9f129ca12492031

Monday, February 14, 2011

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி??

 (ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?



1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code)
திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.
பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக்
கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா
காட்டவும்.

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே
நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட்
நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள்
எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை
எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான
விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள்.
அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9.. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும்,
நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச்
செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.

11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு
பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று
சொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச
நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங்
போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து
வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,
மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது
போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும்
நெடுக்கும் நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக
இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள்.
போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.

16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.
மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி
குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி
கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால
நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை
மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால்
நமக்காக யார் பேசுவார்கள்?